search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யபிரதா சாகு"

    தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
    சென்னை:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
    பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். #SatyabrataSahoo #FinalVotersList
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆகும்.

    இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து 960 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 367. மூன்றாம் பாலினத்தவர்கள் 5,472 பேர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 38 ஆயிரத்து 656 வாக்காளர்கள் அதிகம்.



    திருப்பரங்குன்றத்தில் இளம் வாக்காளர்கள் அதிகம். இங்கு 7,697 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 4,189, பெண்கள் 3,507).

    தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு மொத்தம் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,11,102, பெண்கள் 3,07,518, மூன்றாம் பாலினத்தவர் 75).

    குறைந்த வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 1,66,518. (ஆண்கள் 83,039, பெண்கள் 79,427, மூன்றாம் பாலினத்தவர் 49).

    முதல் முறையாக ஓட்டு போடும் 18 வயது நிரம்பியவர்கள் 4.5 லட்சம் பேர் உள்ளனர்.

    வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும்.

    வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.

    தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுடன் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.

    பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தான் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக எங்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்தப்படும்.

    தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஓசூர் தொகுதி காலி இடம் பற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #FinalVotersList
    சென்னையில் இன்று 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். #TNElectionsCEO #SatyabrataSahoo
    சென்னை:

    சென்னையில் 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் தங்களது பெயர்களை சேர்க்க மனு செய்துள்ளனர்.

    முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.


    சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

    மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கமி‌ஷனர் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள், உதவி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பெயர் சேர்ப்பு எந்த அளவுக்கு உள்ளது? சிறப்பு முகாம்களில் அரசியல் கட்சியினர் எவ்வளவு மனு கொடுத்துள்ளனர். இதில் தகுதியான மனுக்கள் எவ்வளவு போன்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #TNElectionsCEO #SatyabrataSahoo
    ×